அரச சேவையில் இணையவுள்ளோருக்கான வயதெல்லை அதிகரிப்பு!!

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 35 இலிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

35 வயதாக காணப்பட்ட சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டில் மூன்று கட்டங்களில் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி