இன்று முதல் மாற்றமடையும் காலநிலை!

தென்மேற்கு பருமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிப்பானது இன்று மாலை 3 மணியில் இருந்து எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனடிப்படையில், மேல், சப்ரகமுவை, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சபரமுகவை மாகாணத்திலும் மேல் மாகாணத்தின் களுத்துறை, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் கனமழைப் பெய்யக் கூடும்.

இதனை தவிர, மேல், தென், வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மாத்தளை, நுவரெலியா, பொலன்நறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி