இன்று இடம்பெற்ற முல்லை நகர் வீடமைப்பு திட்ட திறப்பு விழா!!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 75ஆவது மாதிரி கிராமமான முல்லை நகர் வீடமைப்பு திட்ட திறப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வீட்டுத் திட்டமானது பயனாளிகளின் ஐம்பது வீத பங்களிப்புடனும், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஐம்பது வீத கடன் அடிப்படையிலான நிதியளிப்பிலும் 550 சதுரடி கொண்டதாக இருப்பதைந்து வீடுகள் அமையப் பெற்றுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை todayya[email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி