கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளித்த கனடா நாடாளுமன்றம்!

கனடாவில் கஞ்சா விற்பனைக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து கனடா வாழ் தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடா நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது.

இதனால் புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.

இது குறித்து அங்கு வாழும் தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

80 வயதான பொன்னம்மாள் கூறுகையில், அரசே இப்படி செய்கிறார்கள், முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் கெட்டு போய்விடுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல என கூறியுள்ளார்.அவரின் மகள் ப்ரீத்தி கூறுகையில், என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம்.

குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.

வாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறுகையில், சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று.

அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா? உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி