மீண்டும் பதவியிலமர்த்தப்பட்ட ரவி கருணாநாயக்க!!

பிணை முறி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்கவுக்கு அடுத்த வாரம் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு ஜனாதிபதித் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ரவி கருணாநாயக்க சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் அவற்றை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்திருந்ததுடன் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் அந்த காலகெடு முடிவடைகிறது.

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்காமல் தவிர்க்கும் அளவுக்கு எந்த காரணங்களும் இல்லை என்பதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி