யாழில் வாகன விபத்து! இருவர் படுகாயம்!!

யாழ். சாவகச்சேரி நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குறித்து இருவரும் மட்டுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி