திட்டமிடப்படாத ஒழுங்குபடுத்தலால் குழப்பத்தில் ஆசிரியர்கள்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளது திட்டமிடப்படாத நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தல் காரணமாக வடமாகாண ஆங்கில ஆசிரியர்கள் பெரும் குழப்ப நிலையடைந்த சம்பவமொன்று இன்றைய தினம் நடைபெற்றது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஆங்கில ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று (15.06.2018) காலை 8.30 தொடக்கம் 4.30 வரை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த செயலமர்வு நடைபெறமாட்டாது, அது நாளை (16.06.2018) காலை நடைபெறும் என சகல வலயங்களுக்கும் இன்று 14.06.2018 பி.ப. 2 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சரியான முறையில் சென்றடையாமையால் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள ஆங்கில ஆசிரியர்கள் குறித்த செயலமர்விற்காக இன்றைய தினம் மருதனார்மடம் இராமநாதன் கல்லாரிக்கு வந்து ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இன்றைய தினம் புனித றம்ழான் தினம் அனுஸ்டிக்கப்படுவது தெரிந்திருந்தும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையே குறித்த குழப்ப நிலைக்க்கு காரணம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி