டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த சிங்கப்பூர் வந்தடைந்த கிம் ஜாங் உன்!!

அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்களின் சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தலமான செண்ட்டோசா தீவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ எனும் ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார்.

கிம் ஜாங் உன்-ஐ சிங்கப்பூரின் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அந்நாட்டு விமான நிலையத்தில் வரவேற்றார். இதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கு வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி