சிறுத்தையை தாக்கியமை குறித்து கைதான 10 பேரும் பிணையில் விடுதலை!!

அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதவான் சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வழக்குத் தொடுனர் தரப்பில் முன்னிலையான கிளிநொச்சிப் பொலிஸார், சிறுத்தை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையுறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற மன்றத்திலும் வாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொருடடு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் பலரை கைது செய்யவேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி