2வது நாளாகவும் தொடர்ந்த சர்வதேச பெண்கள் மாநாடு!

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மாநாடு நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்றும் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாடு நாளைய தினமும் நடைபெறவுள்ளது.

இதில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறை சார்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

ஆய்வு மாநாட்டின் தொடக்கவுரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் பேரிசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி