கூகுள் நிறுவனத்தின் மீது 5000 கோடி டொலர் அபராதம்!!

உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனம், ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 5000 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கூகுள், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக எழுந்துள்ள முறைப்பாட்டினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் ஆண்ட்ராய்ட் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இதனடிப்படையில் கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 5000 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, கூகுளின் இந்த சட்டவிரோத செயல்பாடு இன்றிலிருந்து 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். இல்லையேல் மேலும் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி