சுதந்திரக் கட்சியின் சார்பாக களமிறங்கும் வேட்பாளர் யார்??

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே என கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடுவார் என சுதந்திரக் கட்சியின் 16 பேர் கூறிய போதிலும், சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்...

16 பேர் சலுகைகள் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி இவர்கள் சுயலாபம் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் பிரபல்யமான ஒருவர் என்ற போதிலும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக மீளவும் தெரிவு செய்ய முடியாது.

மலர்மொட்டு கட்சி மீளவும் குடும்ப அரசியலை நோக்கி நகர்கின்றது. 2015ஆம் ஆண்டில் ஆட்சியை நிறுவிய அரசாங்கம் குடும்ப அரசியலை எதிர்க்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி