சீன விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய மைத்திரி!!!

2015 ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு பொலிஸாரின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவும் கூட விசாரணை நடத்தியதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிறைவு செய்யப்படாத அந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, 2016ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது, இலங்கை அரசியல் பரப்புரைகளுக்கு நிதியளிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை.

எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்தும், எல்லா அரசியல் கட்சிகளும், பகிரங்கப்படுத்துவது அல்லது எந்த ஆபத்தும் இன்றி சட்ட ரீதியாக கொடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திடம் இருந்து மஹிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாாரம் சூடு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி