சந்தேகநபர்களிற்கு தொடரும் விளக்கமறியல்!

யாழ். சுழிபுரம் சிறுமி றெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும்​ ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகி இருந்ததுடன், இந்த வழக்கில் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய், மற்றும் மாமா ஆகியோர் பிரதான சாட்சிகளாக மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி