இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதில் அமைச்சு பதவியை வழங்க சிபாரிசு!!

விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று காலை த.வி கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

விஜயகலா ஒருதாய். குறித்த காலப்பகுதியில் சிறுமியின் கொலைச் சம்பவம் அதிகம் பேசப்பட்டு வந்த சூழலில் அமைச்சர்கள் பலர் அங்கு சென்றுவந்தனர். இந்த நிலையில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாது விஜயகலா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது ஓர் தவறு கிடையாது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தனர். அதனால் குற்றம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்தும் தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணி கூறிய ஆதங்க கருத்தினை முன்வைத்துள்ளார்.

நாட்டை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடும் திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல என குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி