மகிந்த ராஜபக்ச வெளியிட்ட ஊடக அறிக்கைபோல் வெளியிடப்பட்டுள்ள போலி ஆவணம்!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட ஊடக அறிக்கைபோல் போலி ஆவணம் ஒன்றை தயாரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இனந்தெரியாத சிலர் நேற்றைய தினம் ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச இன்னும் அறிவிக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்த சிலர் இந்த போலி ஆவணத்தை வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவானது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியவற்றின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படும் போது ஊடக அறிக்கை வெளியிடப்பட மாட்டாது. அத்துடன் அது பிரசித்தமான இடம் ஒன்றில் வைத்து பகிரங்கமாக அறிவிக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் வெளியான போலி ஆவணம்“2020 ஜனாதிபதித் தேர்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படாது. 2019ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதனை மகிந்த ராஜபக்சவே முதலில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததாகவும் ரொஹான் வெலிவிட்ட தனது அறிக்கையில் கூறியுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி