மஹிந்தவின் போலி அறிக்கை குறித்து பொலிசில் முறைப்பாடு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரில் வௌியான போலி அறிக்கை குறித்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளதாக கடந்த 17ம்திகதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கடிதத் தலைப்பில் அவரின் கையொப்பத்துடன் சமூக வலைத்தளங்களில் ஒரு கடிதம் பரவியிருந்தது.

எனினும் குறித்த கடிதம் போலியானது என்றும் பொதுமக்களை திசைதிருப்பும் வகையில் அவ்வாறான ஒரு கடிதம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகச்செயலாளர் அறிவித்திருந்தார்.

அதே நேரம் குறித்த போலியான கடிதத்தை தயாரித்து பரப்பியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த அணி சட்டத்தரணியொருவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி