மூடி மறைக்கப்பட்ட ராஜபக்சவின் சொத்து மதிப்பு!!

மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சம்பாதித்துள்ளதாக கூறப்படும் சொத்துக்கள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் விசேட விசாரணைப் பிரிவு என்பன நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலான காலம் சென்றுள்ளது.

எனினும் இதுவரை அந்த முறைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளை அடிப்படையாக கொண்டது என வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனம் ஒன்று முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமை தொடர்பான முறைப்பாடு முதலில் இலங்கை மத்திய வங்கிக்கே கிடைத்துள்ளது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அதன் பின்னர் விசாரணைகள் விசேட விசாரணைப் பிரிவிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்த பிக்கு சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தியிருந்ததுடன் எல்லே குணவங்ச தேரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இது சம்பந்தமான விசாரணை அறிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத்திடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் சம்பந்தமான பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி