கரும்புலிகள் தின நிகழ்வினை நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

கரும்புலிகள் தின நிகழ்வினை நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாணத்தின் பல இடங்களில் கடந்த 5ஆம் திகதி கரும்புலிகள் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்போது, கிளிநொச்சி - அக்கரயான்குளம், ஸ்கந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வீதிகளில் உயிர் நீத்த கரும்புலி உறுப்பினர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கு ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் கரும்புலிகள் தின நிகழ்வுகளை அனுஸ்டித்த நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கின் பல பகுதிகளில் கரும்புலி தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி