வடக்கு, கிழக்கில் மேலும் விடுவிக்கப்படவுள்ள காணிகள்!!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் மேலும் 902 ஏக்கர் நிலம், அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ஏக்கர் தனியார் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 318 ஏக்கர் அரச நிலமும், 160 ஏக்கர் தனியார் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி யாழ்ப்பாணத்தில் படையினர் பயன்படுத்தி வரும் 227 ஏக்கர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், வடக்கு, கிழக்கில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக வாக்குறுதியளித்திருந்தது.

அதற்கமைய படிப்படியாக காணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி