பிரதமரை சந்தித்த அமெரிக்காவின் இராணுவ தலைமை அதிகாரி!

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் றொபர்ட் பிரவுண் உட்பட தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடந்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன், தூதரகத்தின் அரசியல் விவகார செயலாளர் ஜோஹானா என்.பிரிச்சட், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, மேஜர் ஜெனரல் எம்.எம்.எஸ். பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி