ரஷ்ய உளவாளியாக நடித்த பெண்ணை கைது செய்த வாஷிங்டன் பொலிசார்!!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷ்ய உளவாளியாக நடித்த பெண்ணை வாஷிங்டன் பொலிசார் கைது செய்தனர்.

ரஷிய நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பின்னர், ரஷ்யாவில் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் இருந்தார்.

அதன் பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அதன் மூலம் பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார்.

அமெரிக்க அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு துறையால் தடைவிதிக்கப்பட்டவர் அலெக்ஸாண்டர் டோர்ஷின். ரஷ்ய மத்திய வங்கியின் துணை தலைவராக இவர் இருந்துள்ளார்.

இவருடன் மரியா நெருக்கமாக இருந்துள்ளார். அலெக்ஸாண்டரின் திட்டப்படி, அமெரிக்க அரசின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்த மரியா முயன்றுள்ளார். மேலும், அமெரிக்க அரசின் தேசிய முடிவுகளில் தலையீடும் செய்திருக்கிறார்.

இவரது நடவடிக்கைகளை அமெரிக்க உளவுப்படையினர் கவனித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியாவை அமெரிக்க பொலிசார் வாஷிங்டனில் கைது செய்தனர். இந்நிலையில், மரியா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி