வடக்கில் விஞ்ஞானத் துறையினை மேம்படுத்த நடவடிக்கை!!

வடக்கில் விஞ்ஞானத் துறையினை மேம்படுத்தும் விதமாக தேவையான சகல உதவிகள் மற்றும் நிதி வழங்களையும் ஏற்படுத்திக்கொடுக்க தாம் தயாராகவிருப்பதாக விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் முதலாவது விஞ்ஞான ஆய்வு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வளமான எதிர்காலத்துக்கு விஞ்ஞானத்தின் ஊடான தேடல்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரணையுடன் இந்த மாநாடு யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மண்டபத்தில் இடம்பெற்றது

இம்மாநாடு யாழ் மாவட்டத்தில் முதல்தடவையாக இடம்பெறுகின்றது.

விஞ்ஞான பீட விரிவுரையாளர் எஸ்.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை பிரதம அதிதியாக விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகம பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் பணிப்பாளர் தர்மதிலக்க உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் விஞ்ஞான ஆய்வுகள் தொடர்பில் துறைசார் வல்லுனர்களால் இங்கு விசேட விளக்கங்கள் வழங்கப்பட்டது

அத்தோடு சர்வதேச விஞ்ஞான ஆய்வு மாநாட்டை நினைவுபடுத்தும் விஞ்ஞான மாநாட்டு நூலினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்கேஸ்வரன் வெளியிட்டுவைக்க அமைச்சர் சரத் அமுனுக பெற்றுக்கொண்டார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி