விஜயகலா மகேஸ்வரனை தற்போதைய அரசாங்கம் என்றுமே கைது செய்யாது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தற்போதைய அரசாங்கம் என்றுமே கைது செய்யாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்விருந்தேன்.

அரசாங்கம், முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தும் விதத்தை பார்த்தால் இதற்கு தீர்வு கிடைக்காது. இதனால், சட்ட நடவடிக்கைகளை எடுப்பது சிரமம்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கி வருகிறது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியன லெப்டினட் கொமண்டர் பீ.பி.எஸ். ஹேமச்சந்திர எழுதிய “நந்திக்கடல் வரை பாதையை அமைத்தது யார்?” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே கம்மன்பில இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி