தூக்குத் தண்டனை தொடர்பான கருத்து உருவாக யார் காரணம்??

தூக்குத் தண்டனை தொடர்பான கருத்து உருவாக நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாரும், நீதிமன்றமும் சிறைச்சாலையும் ஒழுங்காக செயற்பட வில்லை என்பதே காரணம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய சரத் பொன்சேகா,

குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு, போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுவதாயின் தவறு எங்கு இருக்கின்றது என்று அவசரமாக கண்டறிய வேண்டியுள்ளது என

நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த தூக்குத் தண்டனை அவசியம் என சமூகத்தில் கருத்தொன்று வளர்ந்துள்ளது.

நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாரும், நீதிமன்றமும் சிறைச்சாலையும் ஒழுங்காக செயற்பட வில்லை என்பதே இக்கருத்து உருவாவதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி