யாழ் பலாலி விமான நிலையத்தை சுவீகரிக்க இந்தியா திட்டம்!

மத்தள விமான நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ள எண்ணவில்லை என்று இந்தியா கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்பது குறித்து இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு இதுவரை யோசனைகள் எதுவும் கிடைக்கவில்லை என இந்திய சிவில் விமான சேவைகள் இணையமைச்சர் ஜயந்த் சிங்ஹா கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பை திசை திருப்பும் நோக்கில் இந்தியா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அவ்வப்போது கூறியிருந்தனர்.

மத்தள விமான நிலையத்தை மாத்திரமல்ல, யாழ். பலாலி விமான நிலையத்தையும் சுவீகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி