இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டி சேவை!!

இந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 suwafariya எனும் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

குறித்த அவசர அம்புலான்ஸ் வண்டி சேவை இம்மாதம் 21 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வடமாகாண ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது. அவற்றில் யாழ். மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதம் வழங்கி வைக்கப்படவுள்ளது.இந்த செயல் திட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை வடக்கு சுகாதார அமைச்சில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

இதேவேளை, ஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வெறு மாவட்டத்திலும், ஒதுக்கப்பட்ட நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர அம்புலன்ஸ் வண்டி உதவி தேவைப்படுபவர்கள் 1990 suwafariya அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி