அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ள விஜயகலா!!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பையும் தீவிர எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

மேலும் தனக்கு எதிரான எதிர்ப்பலைகள் மற்றும் தான் சொல்லவந்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் அவர் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்ற தயாராகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி