இலங்கையுடன் இணைந்து செயற்படவுள்ள ஐக்கிய நாடுகள்!!

ஐக்கிய நாடுகள் உணவு திட்டம் மற்றும் இலங்கைக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய விடயங்கள் தொடர்பில் இணைந்து செயற்படுவது குறித்து இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் 2025ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்கை நோக்கி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா உணவு திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உதவிசெய்யும். வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்து தொடர்பிலேயே இந்த உதவிகள் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி