வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன்!

1998 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றதால் உலகில் உள்ள அனைத்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியானது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக பிரான்ஸ் கொண்டாட்டம் மற்றும் அவர்களது வெற்றி குறித்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி வீரர்கள் பாரிஸில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இவர்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்பரித்தனர்.

இறுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் மாளிகையை அடைந்தனர். அங்கு, தனது காதல் மனைவி பிரிக்கெட்டியுடன் இணைந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

விருந்துக்கு பிறகு, அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி