வடமாகாண சபையின் விசேட அமர்வு!!

வடமாகாண அமைச்சார் சபையில் பா.டெனீஸ்வரன் அமைச்சராக உள்ளாரா? இல்லையா? என சாச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வை நடத்துமாறு 19 உறுப்பினர்கள் அவை தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாணசபையின் 126ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது மாகாண அமைச்சர்கள் யார்? எத்தனை பேர் என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுப்பதற்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்துமாறு 19 மாகாணசபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி விசேட அமர்வு ஒன்றிணை நடாத்த அவை தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி