இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய நவீன வசதிகள் மூலம் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து, ரயில் மற்றும் பொதுவாக வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடிய முற்பண கொடுப்பனவு அட்டை ஒன்று 3 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அட்டையின் ஊடாக மீதிப்பணம் செலுத்தும் பிரச்சினைகள், மாற்று பணம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என ஆணைகுழுவின் தலைவர் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முழுமையான போக்குவரத்து சேவைகளின் தரவுகள் மற்றும் முழுமையான போக்குவரத்து வீதிகளின் தரவுகள் அட்ங்கிய தகவல் கட்டமைப்பு ஒன்று 6 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

கூகிள் வரைப்படம் ஊடாக இந்த தகவல் கட்டமைப்பின் தகவல்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும், இந்த தகவல் கட்டமைப்பின் ஊடாக பேருந்து கட்டணம், செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக நெருங்க கூடிய வீதிகள் மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து 20 வீதம் பேருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சொகுசு மற்றும் அதிசொகுசு போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளமையினால் அந்த கட்டணத்தை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி