பல இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கோடீஸ்வரர்கள்!!

பல இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கோடீஸ்வர வர்த்தகர்களின் இரண்டு மகன்கள் மற்றும் இரவு விடுதி ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல விகாரையின் பெரஹரவில் நடனமாடிய இளம் பெண்களை பாலியல் ரீதியாக இவர்கள் துன்புறுத்தியுள்ளனர்.

இளம் பெண்கள் விடுதியில் நடனமாட வைத்தமை மற்றும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் மேலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி