நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தேசிய கணக்காய்வு சட்டமூலம்!!

தேசிய கணக்காய்வு சட்டமூலம் திருத்தங்களுடன் ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான முழுநாள் விவாதம் இன்று நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விவாதத்தில் கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்தனர்.

அரசாங்க நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நிதி மோசடிகள் மற்றும் வீண்விரயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிறுவனங்களை கணக்காய்வுக்கு உட்படுத்தல், கணக்காய்வாளர் அதிபதியின் அதிகாரங்களும் பணிகள், கணக்காய்வின் பின்னர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்கானப்பட்டவருக்கு ஆகக் குறைந்த 5 ஆயிரம் ரூபாவும், 25 ஆயிரம் ரூபாவுக்கு அதிகரிக்காத தண்டப்பணம் அறிவிடுதல் போன்ற விடயங்கள் இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய கணக்காய்வுக்கு சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. எனினும், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றாது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்து.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை கணக்காய்வு தகவல்களை வெளியிட முடியாது என இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி