மஹிந்தவின் பாரிய ஊழல்கள் குறித்து ஆரம்பமான விசாரணைகள்!!

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் நிறுவப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றஅமர்வுகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கியஸ்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நீதிமன்ற அமர்வுகளுக்காக சுமார் 100 சட்டத்தரணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த விசேட நீதிமன்ற, நீதிபதிகளாக சம்பத் அபேகோன், சம்பத் விஜேரட்ன, சம்பாஜானகி ராஜரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நாளை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள நீதிமன்றத்தை போன்று மேலும் இரண்டு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்த நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் குறித்து மேன்முறையீட்டைநேரடியாக உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ள முடியும என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றத்தை அமைக்க, நாடாளுமன்றம் கடந்த மே மாதத்தில் அனுமதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி