வெண்கலப் பதக்கத்தினை வென்ற யாழ் இந்து மாணவன்!

யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இவர் 2013- பிலிப்பைன்ஸ், 2014- இந்தோனேஷியா, 2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி