பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்ல மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி பசில் ராஜபக்ச கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாத்தறை மேலதிக நீதவான் நில்மனி குசும் விதானாரத்ன, பசில் வெளிநாடு செல்ல மூன்று மாத காலம் அனுமதி வழங்கியுள்ளார்.

மாத்தறை - பிரவுன்ஹில்ஸ் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் பண சலவை சட்டத்தின் கீழ், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்ல தடைவிதித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி