யாழ்ப்பாணத்தின் கல்வி தரத்தில் வீழ்ச்சி - ரணில் விக்ரமசிங்க

முன்னொரு காலத்தில் கொழும்புக்கு நிகராக யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய பிரதமர்,

“யாழ்ப்பாணத்தில் முன்னர் காணப்பட்ட கல்வி நிலையை மீண்டும் கொணடு வரவேண்டும். இதற்கு நன்கு பயிற்றுவிக்க கூடிய ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றார்கள்.முன்னொரு காலத்தில் கொழும்புக்கு நிகராக யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் காணப்பட்டது. சர்வதேச பல்கலைக்கழங்களுக்கு யாழில் இருந்தே அதிகளவானவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

எனினும், அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

இந்நிலையில், வடக்கில் கல்வித்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசிரியர்களை பற்றுவிப்பதற்கு ஓய்வுபெற்று வெளிநாடுகளில் இருக்கும் ஆசிரியர்களை வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளால் அழைத்துவர முடியும்.

மேலும், வடக்கில் இருக்கும் கல்வியற் கல்லூரிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு போதமான நிதிகள் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக” பிரதமர் மேலும் கூறியுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி