எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குவதற்கு இரா. சம்பந்தன் மாத்திரமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக கூடுதலான உறுப்பினர்களை கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி இரா. சம்பந்தனுக்கு வழங்கியமையானது ஜனநாயக விரோத செயலாகும்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போன்றே செயற்பட்டு வருகின்றது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் சபாநாயகரை சந்தித்து பேசியிருக்கின்றோம். சபாநாயகரும் ஆகஸ்ட் மாதம் வரையில் அவகாசம் கோரியுள்ளதாக” தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி