இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள்!!

புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் இந்த போராட்டமானது பணி நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புகையிரத சேவைகளில் தாமதம், சேவைகள் ரத்தாகும் நிலை உட்பட பல பிரச்சினைகள் ஏற்படலாம் என புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தின் அடிப்படையில் தொழில்களுக்கு செல்வோர் உட்பட புகையிரத பயணிகளாக காணப்படும் இலங்கை மக்கள் பலர் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி