பிரான்ஸில் அதிகரித்து வரும் வெப்பம்! வானிலை மையத்தின் சிவப்பு வண்ண எச்சரிக்கை!!

பிரான்ஸின் பாரிஸ் மற்றும் வடக்கு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டு வானிலை மையம் சிவப்பு வண்ண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்கு, அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இருந்து இந்த வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு இந்த வெப்பநிலையானது மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரிஸ் நகரில் பகல் நேரங்களில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவு நேரங்களில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வடக்கு பிரான்ஸில் 32 டிகிரி செல்சியஸ் பகலிலும், 15 டிகிரி செல்சியஸ் இரவிலும் வெப்பநிலை நிலவும்.

இது 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும், ரோன் வால்லே பகுதி அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிஸ், எசோன்னி, ஹைட்ஸ்-டி-செய்ன், செய்ன்-செயிண்ட்-டெனிஸ், செய்ன்-எட்-மெரின், வால்-டி-மெரின், வால்-டிஓயிஸ் மற்றும் யுவ்லைன்ஸ் ஆகிய பகுதிகள் சிவப்பு வண்ண எச்சரிக்கை வளையத்தில் உள்ளன. ஆனால், வரும் சனிக்கிழமை இந்த வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி