சர்ச்சைகளுக்கு மத்தியில் அவசரமாக லண்டன் செல்லும் விஜயகலா மகேஸ்வரன்!!

இலங்கையில் தற்போது அதிகம் பேசப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் லண்டன் செல்லவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அவசியம் குறித்து கருத்து வெளியிட்ட விஜயகலாவினால், இலங்கை அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அவர் தனிப்பட்ட விஜயமாக லண்டன் செல்லவுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் எழுந்த நிலையில் நெருக்கடி நிலையை அடுத்து, விஜயகலா தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பு அரசியலில் அவர் இனவாதியாக சித்தரிக்கப்பட்டாலும், யாழ்ப்பாணத்திலுள்ள அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தற்போதும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அவரின் லண்டன் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி