பொதுமக்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயம்!!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மான்செஸ்டர் பகுதியில் Caribbean Carnival ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் திரளாம மக்கள் குழுமியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் எவரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை எனவும், மருத்துவமனையில் சேர்ப்பித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவப்பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை தேடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி