கூடைப்பந்து போட்டிக்கு சென்ற 4 வீரர்கள் செய்த லீலையை பாருங்க

ஆசிய போட்டியில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியாவுக்கு சென்று அங்குள்ள ஹோட்டலில் உல்லாசமாகவிருந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 4 கூடைப்பந்து வீரர்களுக்கு ஒரு ஆண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியா சென்ற குறித்த நான்கு ஜப்பான் வீரர்களும் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டலில் உல்லாசமாகவிருந்த நிலையில் அவர்கள் நால்வரும் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும், இதுகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்தாட்ட சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு வருட போட்டித்தடை விதித்துள்ளது. அத்துடன் நான்கு பேரின் 3 மாத சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்தாட்ட வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகிய நான்கு வீரர்களும் ஜகர்த்தாவிலுள்ள விடுதியொன்றுக்குச் சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஹோட்டலில் உல்லாசமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி