பிரித்தானியாவில் 90 டிகிரியாக அதிகரித்துள்ள வெப்பநிலை!!

பிரித்தானியா 90 டிகிரியை தொட்ட நிலையில் இன்றைய தினம் இரண்டாவது கொதிக்கும் வெள்ளிக்கிழமையாக கருதப்படுகிறது.

வெப்பக் காற்றுகள் தொடர்ந்து வீசும் நிலையில் மத்திய ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 118 டிகிரியை எட்டும் என்னும் எச்சரிக்கை செய்தியும் வந்துள்ளது.

நாட்டின் 50 மாகாணங்களில் 41இற்கு உடல் நலனைக் கருத்தில் கொள்ளும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு போர்ச்சுகல்லில் எட்டு இடங்களில் ஏற்கனவே வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் உச்ச நிலையைத் தொட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பத்தைத் தாங்க இயலாத மக்கள் தாங்கள் சன் பாத் எடுக்கும் இடங்களைச் சுற்றிலும் ஈர டவல்களை தொங்கவிட்டு அதற்கு நடுவில் படுத்துக் கொள்கிறார்கள்.இதற்கிடையில் சுமார் 7 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் United Utilities நிறுவனம், ஞாயிறு முதல் தண்ணீர்க் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருந்தது.

வட மேற்கு இங்கிலாந்தில் பல மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்ணீர்க் கட்டுப்பாடுகளை அது இன்று வாபஸ் பெற்றுக் கொண்டது.

என்றாலும், வரும் வாரங்களில் போதுமான மழை பெய்யாவிட்டால் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி