மட்டக்களப்பு வைத்தியசாலையில் நகை களவு போன விடயம்: திடீரென மரத்துபோன சம்பவம் !

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நகை களவு போன விடயம் வழமைபோல கொஞ்சநாள் பேக் ஐடிகளின் துணையுடன் பரபரப்பாகப் பேசப்பட்டு, திடீரென மரத்துப்போய் விட்டது.அந்த விசாரனைக்கு என்ன நடந்தது?

களவு கொடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்து வாய் அடைக்கப்பட்டுள்ளதாக ஒரு வாய்வழிக்கதை வருகின்றது. இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

பொலிஸ் விசாரனையில், அனைத்து மாணவர்களை வைத்து ஆள் அடையாளம் காணும் அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டும், அது திடீரென நிறுத்தப்பட்டதாகவும் கதை வருகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?

ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லிக்கொள்வது, இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாராரைமட்டும் ஊகத்தின் அடிப்படையில் குறி வைத்துத் தாக்கும்போது, குற்றவாளி இலகுவாகத் தப்பித்து விடுவான்.

ஆரம்பம் முதலே வைத்தியர்களை குறி வைத்துத் தாக்கியதால், இந்தப் பிரச்சினை பற்றி நியாயமாகக் குரல் கொடுத்த வைத்தியர்களும் பேக் ஐடிகளால் தாக்கப்பட்டனர்.

கடைசியில் யாருமே இந்தப்பிரசினைக்கு குரல் கொடுக்காத நிலை வந்துவிட்டது.

நான் அறிந்த வரையில் மருத்துவர்கள் சார்பாக விசாரணை வேண்டும் என்ற நிலையே முன்னெடுக்கப்படுகிறது, யாருமே விசாரனை வேண்டாம் என்ற நிலையில் இல்லை.

வைத்தியர்கள் சார்பாக பணம் சேர்த்து அந்தப் பெண்ணுக்கு ஒரு நஸ்ட ஈடு கொடுப்போம் என நான் வேண்டிய போது, ஒட்டுமொத்தமாக அத்தனைபேரும், இப்போது நாம் கொடுத்தால், உண்மையில் நாம் தான் செய்துவிட்டு மூடி மறைக்க முயற்சிப்பதாக நினைப்பார்கள் என பலர் சொன்னதால் அந்த ஐடியா கைவிடப்பட்டது.

ஆகவே மருத்துவர்கள் சார்பாக யாருக்கும் பணம் கொடுத்து விசாரணையை முடக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியென்றால்,

இந்த விசாரனை பின் நிற்பதற்கான காரணம் என்ன?

களவு கொடுத்த பென்ணே விசாரனைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக வரும் செய்தி எந்தளவு உண்மையானது?

இதற்கான பதில்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையினால் உடனடியாக தெளிவு படுத்தப்படவேண்டும். வைத்தியர்கள் சார்பாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால், மட்டக்களப்பு வைத்திய நலன்புரிச் சங்கமும் இதற்கான பொலிஸ் விசாரனை திருப்தியளிக்காவிட்டால், சீ ஐ டி விசாரனைக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னபடி, இந்த விடயத்தில் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதொன்றும் பெரிய கஷ்டமில்லை. இதற்கான விசாரணைப் படிமுறைகளை ஒழுங்காகச் செய்தால் இன்னேரம் குற்றவாளி பிடிபட்டிருக்க வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை, மட்டக்களப்பு அரசியல்வாதிகளும் கொடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு அரசியல்வாதிகள் யாரும் இதுவரை இதுபற்றி வாய்திறக்காமல் இருப்பதும் ஆச்சரியமாக உள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி