ஆளுநர் உட்பட முக்கிய நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு!!

நேர்முகப்பரீட்சைக்கு அழைத்தும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய நான்கு பேர் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பல தடவைகள் தொண்டராசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை இடம்பெற்ற போதிலும் 456 தொண்டராசிரியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ள நிலையில் தங்களுடைய பெயர்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறும் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஜீ.எம்.டபிள்யூ.ஜீ.திஸ்ஸநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா ஆகியோருக்கு எதிராக தொண்டராசிரியர் சார்பில் சட்டத்தரணி எஸ்.தில்லைராசாவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை குணரத்னம் ரிசிபா, நடராஜா பிரேமிலாதேவி, விக்னேஸ்வரன் தேன்மொழி மற்றும் பிரைசோதி யோகராணி ஆகியோரே இவ்வழக்கினை இன்று தாக்கல் செய்துள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி