ஐ. நா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இலங்கை!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளின் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இஸ்ரேல், பாகிஸ்தான். ஓமான். மியன்மார், தாய்லாந்து, துருக்கி, பஹ்ரைன், ஈராக், தென் சூடான், தஜிகிஸ்தான், டர்க்மோனியா, உஸ்பெகிஸ்தான், மெக்ஸிகோ, அல்ஜெரியா, எரித்திரியா, ஹொன்டுராஸ், மொரக்கோ, சூடான் போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி