அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாது!!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிடுவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்.

அவர் முழு இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளார் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி