இலங்கையில் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம், சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர்கள் இரண்டு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகையிரதசேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதன் மூலம் தற்போது நாட்டில் நிலவி வரும் வேலை நிறுத்தப் போராட்டங்களை நிறுத்திவிட முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

எனினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்கள தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இதேவேளை, தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்த நேரிடும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி